2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்கவில்லை: கடற்படை பேச்சாளர்

Super User   / 2011 ஜனவரி 23 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காந்த்ய சேனாநாயக்க)

இந்திய மீனவர் ஒருவர் இலங்கைக் கடற்படையினரால் நேற்றிரவு தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுவதை இலங்கைக் கடற்படை நிராகரித்துள்ளது.

 இக்குற்றச்சாட்டை திட்டவட்டமாக நிராகரிப்பதாக  கூறிய இலங்கைக் கடற்படை பேச்சாளர் கப்டன் அதுல செனரத், எந்தவிதமான அடிப்படையும் ஆதாரமும் இன்றி இக்குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக கூறியுள்ளார்.

அடிக்கடி இவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக தெரிவித்த கப்டன் அதுல செனரவிட்ன, இலங்கைக் கடற்படைக்கும் இந்தியக் கடற்படைக்கும் இடையிலான நல்லுறவை குழப்புவதற்கு சில சக்திகள் விரும்புகின்றன என சந்தேகிப்பதாகவும்  கூறியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--