Super User / 2011 ஜனவரி 23 , பி.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
நகைக்கடை உரிமையாளர்கள் பலரிடமிருந்து கிரிமினல் குழுக்கள் நீண்டகாலமாக பெருந்தொகைப் பணத்தை அபகரித்து வந்ததாகவும் ஆனால், அச்சத்தின் காரணமாக மேற்படி நகைக் கடை உரிமையாளர்கள் பொலிஸில் புகாரிடவில்லை என நகையக உரிமையாளர்கள் நேற்று தெரிவித்தனர்.
மேற்படி குழுக்களுக்கு கப்பம் செலுத்தி வந்த வர்த்தகர்கள் உட்பட முன்னணி நகை வர்த்தகர்கள் பலர் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் கடந்த சனிக்கிழமை கலந்துரையாடலொன்றை நடத்தினர். பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இலங்கை நகை வர்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக டெய்லி மிரருக்கு கருத்துத் தெரிவிக்கையில், கப்பம் கோரும் மேற்படி குழுக்கள் அரசாங்க உயர் மட்டத்துடன் தொடர்புள்ளவை என நகை வர்த்தகர்கள் எண்ணியிருந்ததாக தெரிவித்தார்.
'இக்கலந்துரையாடலின்போது எமது சந்தேகத்தை பொலிஸ் அதிகாரிகள் கலைந்தனர். அக்கழுக்கள் அரசாங்க தொடர்புடையவை அல்ல எனவும் இராணுவத்திலிருந்து தப்பியோடியோரைக் கொண்ட தனிப்பட்ட குழுக்கள் அவை எனவும் பொலிஸ் அதிகாரிகள் விளக்கினர். இப்போது எமக்கு அச்சமில்லை' எனக் கூறினார்.
மேற்படி வர்த்தர்கள் செலுத்திய பணத்தொகை குறித்து கேட்டபோது, 'இவ்வர்த்தகர்கள் பிரமாண்டத் தொகைகளை செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அவற்றை வெளியிட விரும்பவில்லை. மில்லியன் கணக்கான தொகையை அவர்கள் செலுத்தியிருக்கிறார்கள். சில சம்பவங்கள் குறித்து பொலிஸில் புகாரிடப்படவில்லை. அவர்கள் உயிர் குறித்து அச்சம் கொண்டிருந்தனர். இப்போது, இக்குற்றச்செயல்களுடன் அரசாங்கத்திற்கு தொடர்பில்லை என்பது தெளிவாகியுள்ளது' என ராதாகிருஷ்ணன் பதிலளித்தார்.
இதேவேளை, கடத்தல்கள் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றால் வர்த்தகர்கள் அச்சமின்றி பொலிஸில் புகாரிட வேண்டும் என கொழும்பு பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
1 hours ago
6 hours ago
24 Oct 2025
alga Monday, 24 January 2011 02:38 PM
நல்லா காமடி பண்ணுராங்கையா
Reply : 0 0
xlntgson Monday, 24 January 2011 09:29 PM
"uyarmattatthodu thodarbu undenru ennikkondu"
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
24 Oct 2025