Super User / 2011 ஜனவரி 24 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
றுகுணு பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் மீது சில தினங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் பராமுகமாக இருப்பதாக றுகுணு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற இத்தாக்குதல் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகாரிடப்பட்ட போதிலும் இதுவi குற்றம் சுமத்தப்பட்ட மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என றுகுணு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் துமிந்த தாரக இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்தார்.
'தாக்குதலில் காயமடைந்த மாணவர்களில் ஒருவர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். குடந்த 19 ஆம் திகதியும் மாணவர் ஒருவர் மீது மற்றொரு தாக்குதல் இடம்பெற்றுள்ளது பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்த மாணவர் மீது முகமூடியணிந்த நபர்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் தொடர்பாக இரு தடவை முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் பல்கலைக்கழக நிர்வாகம் அமைதியாக உள்ளது. இந்த அமைதியின் மூலம் பல்கலைக்கழக நிர்வாகம் தாக்குதல்களுக்கு மறைமுக அங்கீகாரம் வழங்குகிறது' எனவும் அவர் கூறினார்.
26 minute ago
35 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
2 hours ago
3 hours ago