2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

மகாபோதி தேரர்கள் மீதான தாக்குதலுக்கு இனப்பிரச்சினையை தூண்டும் சக்திகளே காரணம்: அரசு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 25 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையிலுள்ள மகாபோதி ஆலய பௌத்த குருமார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் இனங்களுக்கிடையில் சண்டையை மூட்ட முயலும் சக்திகளே, இந்தத் தாக்குதலின் பின்னுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாம் எச்சரிக்கையாய் இருந்து இந்த பொறியில் விழுந்துவிடாமல் இருக்க வேண்டுமெனவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மகாபோதி ஆலய அலுவலகத்தை ஒரு கூட்டத்தினர் நாசப்படுத்தியதோடு 4 பௌத்தமத குருமார்களையும் தாக்கியுள்ளதாக பொலிஸார் கூறியதாக 'த இந்து பத்திரிகை கூறியுள்ளது.

கத்திகளுடன் அலுவலகத்தினுள் நுழைந்த 10 பேர் கொண்ட குழுவினர் தளபாடங்களை உடைத்தனர். இதனைத் தடுக்க முயன்ற இலங்கை பௌத்தமத குருமார்கள் தாக்கப்பட்டனர். இவர்கள் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. Pix: Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X