2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

மொஸ்கோ குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோருக்கு ஜனாதிபதி மஹிந்த அனுதாபம்

Super User   / 2011 ஜனவரி 25 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மொஸ்கோவின் டொமேடொடோவோ சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுதாபம் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவுக்கு அனுப்பியுள்ள செய்தியொன்றிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதைத் தெரிவித்துள்ளார்
நேற்று நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 35 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத்திற்கு மனித சமுதாயம் கொடுக்கும் விலையை நான் நன்றாக அறிவேன். பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அத்துடன் பாதிக்கப்பட்டோர் விரைவாக குணமடைவதற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--