Menaka Mookandi / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா - இலங்கை இடையே ஆரம்பிக்கப்படவுள்ள பயணிகளுக்கான கப்பல் போக்குவரத்து சேவை ஒப்பந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதாகவும், அந்த ஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல் போக்குவரத்துக்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து தலை மன்னார்க்கு கப்பல் போக்குவரத்து உரிமங்கள் வழங்கிட உலகளாவிய ஒப்பந்தக் கோரல் விளம்பரம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், கால அவகாசம் கொடுத்து, அத்தகைய விளம்பரம் வெளியிடப்படவில்லை.
இந்த முயற்சியில் நல்லெண்ணம் இல்லை. சூதாட்டம் இருப்பது வெளிப்படை. இதில் அரசியல்வாதிகளின் தலையீடும் உள்ளது எனவே, முழு விசாரனை நடத்தி, பின்னர் முடிவெடுக்க வற்புறுத்துகிறேன்' என்று மேற்படி அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
8 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Nov 2025