2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

இந்திய மீனவர்களின் கைதை ஏற்றுக்கொள்ள முடியாது: மன்மோகன் சிங்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்;திய மீனவர்களின் கதியையிட்டு இந்தியா தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளதுடன், இதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் தெரிவித்துள்ளது.

கடற்படையின் இவ்வாறான நடவடிக்கை ஏற்புடையதல்லவென்று இலங்கை அரசாங்கத்திற்கு கூறப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

18 இழுவைப் படகுகளிலிருந்து 118 மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட விடயம் கொழும்புடன் பேசப்பட்டுள்ளது. இது அயல் நாடுகள் என்ற பின்னணியில் ஏற்புடைய நடத்தையல்ல என இலங்கைக்கு கூறப்பட்டதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் பேசும்போது கூறினார்.

இந்த எச்சரிக்கையை இலங்கைக்கு அறிவிப்பதற்கு வெளிநாட்டு அமைச்சரை அனுப்பியதாகவும் மன்மோகன் சிங் கூறினார்.

இந்த பிரச்சினை பற்றி இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனியிடம் கேட்டபோது, இது அரசாங்கத்திற்கு கவலை தரும் விடயம். நாம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் எனக் கூறினார்.

இந்;திய மீனவரின் நலனை பாதுகாக்க நாம் எம்மாலான சகலதையும் செய்வோம் என அவர் கூறினார்.

இந்த பிரச்சினை பற்றிய கருத்துக் கூறிய கடற்படைத் தளபதி நிர்மல் வேமா,

'இலங்கை ஜனாதிபதி இங்கு வந்தபோதும் இது பற்றி வலியுறுத்தினோம். இந்த பிரச்சினை தொடர்பில் மீன்பிடிக்கான கூட்டு செயற்குழு நடவடிக்கை எடுக்கவுள்ளது. இதுவே பிரச்சினை தீர்க்கும் வழி என கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--