2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

அமெரிக்க பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை போன்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும்  நாடுகளுக்கு பயணம் செய்வதில் அவதானமாக இருக்குமாறு தனது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான பெரிய நிகழ்வுகளின்போது தாக்குதல்களை நடத்துவது பயங்கரவாதிகளுக்கு இலகுவானதாக இருக்கும். இதன் காரணமாக இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு  பயணம் செய்வதில் அவதானத்துடன் இருக்குமாறு அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு தெரிவித்துள்ளது.

'2011ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறும் என்பது பற்றிய குறிப்பான தகவல்கள் எதுவும் அமெரிக்காவிடம் இல்லை. இருந்தபோதிலும் இவ்வாறான நிகழ்வுகளின்போது பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாமெனவும் அமெரிக்கா தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .