2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு இந்திய அரசும் காரணம்: திருமாவளவன்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை பாதுகாப்பு தரப்பினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல இந்திய மத்திய அரசும் காரணமாகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

பருத்தித்துறை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மெமோரியல் மண்டபம் முன்னிலையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே திருமாவளவன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், '1983ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதும் சிறை பிடிக்கப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. இதற்கு இலங்கை அரசு மட்டுமே பொறுப்பு அல்ல. மத்திய அரசும் காரணமாகும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .