2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

அரசியல் தீர்வு வழங்கும் காலம் குறித்து அறிவிக்க முடியாது: ஜனாதிபதி

Super User   / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு வழங்கப்படும் உரிய காலம் குறித்து அறிவிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
இன்று செவ்வாய்க்கிழமை காலை அலரிமாளிகையில் நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் யுத்தம் செய்த போது அவர்கள் கேட்டவற்றை ஒரு போதும் வழங்கமாட்டேன் எனவும் இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

'தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்த தமிழ் கட்சிகளுடனும் பேச்சு மேற்கொண்டுள்ளோம். இப்பேச்சுவார்த்தை எதிர்காலத்திலும் தொடரும்' என அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

இச்சந்திப்பில் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், பஸில் ராஜபக்ஷ, மஹிந்த சமரசிங்க, தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமல் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--