2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

சுவரெட்டிகள், பதாகைகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்

Super User   / 2011 பெப்ரவரி 22 , பி.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு சுவரெட்டிகள் மற்றும் பதாகைகள் தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் கண்கானிப்பு குழுக்களுக்கிடையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இப்போது பிரச்சார நடவடிக்கைகளுக்காக வேட்பாளர்கள் பிரச்சிகை எதுவுமின்றி சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் பயன்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மேலும் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இதற்கினங்க திருகோணமலை நகர சபை, குளியாப்பிட்டிய நகர சபை, திருக்கோவில் பிரதேச சபை, ருவன்வெல்ல பிரதேச சபை மற்றும் கிரிபாவ பிரதேச சபை ஆகிய ஐந்து சபைகளுக்கான தேர்தல்களே ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே 59 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--