2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

விமானத்தில் வரும் இலங்கை பணிப்பெண்ணின் சடலம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சவூதி அரேபியாவில் அவரது எஜமானியால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இலங்கைப் பணிப்பெண்ணொருவரின் சடலம் இன்று புதன்கிழமை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

36 வயதான புஷ்பவல்லி செல்லத்துரை கொல்லப்பட்டதாக கடந்த வாரம் பிரேத அறிக்கைகள் உறுதிப்படுத்தியிருந்தன.

குறித்த வீட்டு எஜமானியை விசாரணைகள் முடிவடையும் வரை  பொலிஸார் தமது பாதுகாப்பில் வைத்துள்ளனர்.  

புஷ்பவல்லி செல்லத்துரை எவ்வாறு கொல்லப்பட்டாரென்று தங்களுக்கு தெரியாதென இலங்கைத் தூதரகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரியொருவர் 'அராப் நியூஸிற்கு' தெரிவித்தார். 'நாங்கள் விரிவான பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். சவூதி அரேபிய வெளிநாட்டு அமைச்சு ஊடாக அந்த அறிக்கை  பொலிஸாரால்  வெளியிடப்படும்.'

கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி புஷ்பவல்லி செல்லத்துரை கொல்லப்பட்டதிலிருந்து தூதரகம் இந்த விடயம் தொடர்பில் அக்கறை செலுத்தி வருவதாக அந்த அதிகாரி கூறினார்.

'இது தொடர்பில் ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம்'

குறித்த பணிப்பெண்ணுக்கு 6 வயதிற்கும் 13 வயதிற்கும் இடையில் 4 பிள்ளைகள் இருப்பதுடன், இவர்கள் கண்டியில் புஷ்பவல்லியின்  தாயாருடன் வசித்து வருகின்றனர்;. 


  Comments - 0

 • Abdul Bariy Wednesday, 23 February 2011 04:28 PM

  எதற்கு கொல்லப்பட்டார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்

  Reply : 0       0

  fairoos Thursday, 24 February 2011 01:25 AM

  kollappatta nabarin vidayathai araivadudaen nintruvidamal kollappattinkkondrikkum nabargalin nilamaihalaiyum velichchathukku konduvara vendum. appothuthan ethirkalathil ippadyappatta sampavangalai kuraikka mudiyum.

  Reply : 0       0

  xlntgson Friday, 25 February 2011 09:06 PM

  கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றவர்கள்? எப்படி அறிவது?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--