2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் 1ஆவது அமர்வு நாளை

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் முதலாவது அமர்வு நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. 18ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் அமையப்பெற்ற நாடாளுமன்ற சபையால் மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர்களினது பெயர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு முன்மொழியப்பட்டுள்ளன.

ஓய்வுபெற்ற நீதியரசர் பிரியந்த பெரேரா தலைமையிலான இந்த ஆணைக்குழுவிற்கு தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் வேந்தர் கலாநிதி ஜெசீமா இஸ்மாயில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் ரி.ஆனந்தராஜா, முன்னாள் அரச பகுப்பாய்வாளர் நாயகம் கலாநிதி ஆனந்த மென்டிஸ் மற்றும் பேர்னாட் சொய்ஸா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இவர்களுக்கான நியமனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--