Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
இலங்கை – பாகிஸ்தானுக்கிடையில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள சர்வதேச உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை கண்டுகளிப்பதற்காக கொழும்பின் பல பகுதிகளில் பிரமாண்டமான தொலைக்காட்சித் திரைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.
இந்நிலையில், காலி முகத்திடல், நாடாளுமன்றத்திடல், பேலியகொடவில் உள்ள நவலோக விளையாட்டுத் திடல், மாளிகாவத்தையில் உள்ள பி.ரி.சிரிசேன திடல் ஆகிய இடங்களில் மேற்படி தொலைக்காட்சித் திரை அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, குறித்த கிரிக்கெட் போட்டியை நேரடியாகப் பார்வையிடுவதற்கான சகல அனுமதி சீட்டுகளும் விற்று முடிந்துவிட்ட நிலையில் அனுமதிச் சீட்டு வாங்க முடியாமல் போனவர்கள் கிரிக்கெட் திடலைச் சுற்றி நின்று குழப்பம் விளைவிக்கக் கூடாதென்றும், சட்டம் ஒழுங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
போட்டியின் போது பாண்ட் வாத்தியம் வாசிக்க விரும்பும் குழுக்கள் முன் அனுமதி பெற வேண்டும் என்பதோடு பார்வையாளர்கள், சுவரொட்டிகள், பதாதைகள் போன்றவற்றை விளையாட்டுத்திடலுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார். Pix By :- Kushan Pathiraja
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
13 minute ago
18 minute ago