2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

நலன்புரி சேவைகள் தொடர்பிலான குறுஞ்செய்திகளுக்கு ஏமாற வேண்டாம்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 24 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

பெயர் குறிப்பிடாது நலன்புரி சேவைகள் தொடர்பில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் என்று தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு பொதுமக்களை  இன்று அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறான குறுஞ்செய்திகள் தனிப்பட்ட நபர்களினாலேயே அனுப்பப்படுவதாகவும் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இப்படி செய்வதில்லை என்றும் மக்கள் இவற்றினால் ஏமாறக் கூடாது எனவும் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட கூறினார்.

இதேவேளை, 'டயலொக்' கம்பனி, நலன்புரி சேவை தொடர்பான குறுஞ்செய்திகளை வாடிக்கையாளருக்கு அனுப்பியதை ஏற்றுக் கொள்கிறது. இதை 'பெரும் கம்பனிகளின் சமூக பொறுப்பு' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அவற்றை நாம் மேற்கொள்கின்றோம்' என டயலொக் கம்பனியின் வர்த்தக, முதலீட்டு உறவுகள் இணைப்பாளர் இமாஷா கருணாநாயக்க கூறினார்.

அண்மைக்காலங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நிதி சேகரிப்பதற்காக நாம் குறுஞ்செய்திகளை அனுப்பினோம் எற்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் 'தாம் ஒருபோதும் பொதுநலன் சேவைக்கு உதவி கோரி குறுஞ் செய்திகளை அனுப்புவதில்லை என்று கூறிய 'ஏயார்டெல்' நிறுவனம், எமது வலையமைப்பு ஊடாக பொய்யான குறுஞ்செய்திகள் அனுப்பினால், வாடிக்கையாளர் எமக்கு முறைப்பாடு செய்யும் பட்சத்தில் எம்மால் நடவடிக்கை எடுக்க முடியுமெனவும்' கூறியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .