Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 24 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
சிரச தொலைக்காட்சி நிறுவனம் மீது தாக்குதல் நடத்திய குழுவின் அங்கத்தவர்கள் எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்று ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிரச தொலைக்காட்சியானது தமது நிறுவனத்தை தாக்கியவர்களை வீடியோ எடுத்து ஒளிபரப்பு செய்தது. இருந்தும் அரசாங்கம் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை.
தாக்குதலில் ஈடபட்டவர்களில் சிலர் களனியில் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களின் படம் உள்ள சுவரொட்டிகளை நாம் கண்டோம் என்று தெரிவித்த அநுர குமார எம்.பி, இவ்வாறானவர்களை களமிக்கும் அரசாங்கமொன்றே தற்போது நாட்டில் ஆட்சியில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
39 minute ago
43 minute ago