Menaka Mookandi / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுமையா றிஸ்வி)
சப்பிரகமுவா பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் விரிவுரைகளை பகிஷ்கரித்து வருகின்றனர். 58 பல்கலைக்கழக மாணவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்கப்படாதமையினாலேயே இந்த மாணவர்கள் வகுப்புகளை பகிஷ்கரித்து வருவதாக பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் செயலாளர் பிரசன்ன குமாரதிலக்க தெரிவித்தார்.
தடுக்கப்பட்ட 58 மாணவர்களையும் பரீட்சை எழுத அனுமதிக்கப்படும்வரை எமது வகுப்பு பகிஸ்கரிப்பு தொடரும் என அவர் கூறினார். பகிடிவதையில் ஈடுபட்டார்கள் என இந்த மாணவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதாக இவர் கூறினார்.
பகிடிவதை நடைபெறவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் பௌத்த கோவிலின் பிரதம குருவிடம் கூறியிருந்தனர். ஆனால் இப்போது புதிய மாணவர் ஆலோசகர்களுடன் தர்க்கம் செய்தனர் என்று கூறி 58 மாணவர்களுக்கு தடை விதித்துள்ளனர்.
பகிடிவதையில் ஈடுபட்டதாக எழுத்தில் கொடுத்தால் இவர்களை பரீட்சை எழுத அனுப்பதாக மாணவர் ஆலோசகர்கள் கூறியுள்ளனர். செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டால் பின்னர் அது மாணவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம். எனவே, மாணவர்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என பிரசன்ன குமார மேலும் தெரிவித்தார்.
50 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago