2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

தேர்தல் சுவரொட்டி, பதாகைகளுக்கு மீண்டும் தடை

Super User   / 2011 மார்ச் 01 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் சுவரொட்டிகள், பதாகைகளை பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கும் தீர்மானத்தை தேர்தல்கள் திணைக்களம் மாற்றிக்கொண்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்னனர் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின்போது, சுவரொட்டிகளுக்கான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்திருந்தார். விருப்பு வாக்கு இலக்கங்களையும் தகவல்களையும் பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது இத்தீர்மானத்தை தேர்தல்கள் திணைக்களம் மாற்றிக்கொண்டுள்ளது. அனைத்து சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள், கட்அவுட்களை அகற்றுமாறும பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் அவர்களின் சுவரொட்டிகளும் அகற்றப்பட வேண்டும் என தேர்தல்கள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--