Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 மார்ச் 02 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
இரு கிபீர் விமானங்கள் நேற்று ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பான விசாரணைகள் முடியும்வரை இலங்கை விமானப்படையின் கிபீர் விமானங்கள் அனைத்தையும் தரையிலேயே நிறுத்திவைத்திருக்கத் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது
விமானப்படையின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களுக்கா க நேற்றுஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது இரு கிபீர் விமானங்கள் கம்பஹா வான் பரப்பில் ஒன்றுடனொன்று மோதி நொருங்கின. இதில் ஒரு விமானி பலியானமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற விமானப் படையின் 60 ஆண்டு நிறைவிழா சாகசங்களில் கிபீர் விமானங்கள் பங்குபற்றவில்லை.
இதேவேளை மேற்படி விபத்து குறித்து விசாரிப்பதற்காக எயார் வைஸ் மார்ஷல் கபில ஜயம்பதி தலைமையிலனான ஐவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விபத்தின்போது விமானிகள் விமானங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட போதிலும் ஒருவர் இறந்தமைக்கான காரணம் தெரியவில்லை என விமானப்படை கூறுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
53 minute ago
14 Jul 2025