2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

விவசாயிகளுக்கு இணையத்தளத்தின் மூலம் பயிற்சிநெறி

Super User   / 2011 மார்ச் 02 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

விவசாயிகளுக்கு இணையத்தளத்தின் ஊடான சான்றிதழ் பயிற்சி நெறியொன்றை தமிழ் மொழி மூலம் கொழும்பு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கவுள்ளது.

இது போன்ற பயிற்சி நெறி ஏற்கெனவே சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு தொகுதி மாணவர்களுக்கான பயிற்சி நிறைவு செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது தொகுதிக்கான மாணவர்கள் விரைவில் சேர்க்கப்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ஷனிக்கா  ஹிரிம்புறேகம தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இந்த ஒவ்வொரு தொகுதியிலும் 100 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர். இப்பயிற்சி நெறியின் நோக்கம் விவசாயிகளுக்கு நவீன தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்துவதே தவிர  தொழிலை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதல்ல என அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--