2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கட்டாய பதிவை இடைநிறுத்த இணக்கம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 03 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

வடபகுதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பதிவு நடவடிக்கைகளை இடைநிறுத்தி வைப்பதற்கான பொறுப்பை  சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் 'கட்டாய பதிவு நடவடிக்கைகளை' நிறுத்துமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஈஸ்வரபாதம் சரவணபவன், சிவஞானம் ஸ்ரீதரன் கிஷோர் ஆகியோர் சட்டத்தரணி மோகன் பாலேந்திரா ஊடாக  மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, இராணுவப் பேச்சாளர் உபய மெதவல, யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--