2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

இலங்கை சமுர்த்தி அதிகாரசபை சலுகை விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை

Suganthini Ratnam   / 2011 மார்ச் 04 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

இலங்கை சமுர்த்தி அதிகாரசபை சலுகை விலையில் உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் துரித வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக சமுர்த்தி அதிகாரசபையின் பணிப்பாளர் சகல சமுர்த்தி சுற்றறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

அரிசி மற்றும் மரக்கறி வகைகள், தேங்காய்கள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இத்திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகின்றன. நாடு பூராகவுமுள்ள சமுர்த்தி மகாசங்கம், சமுர்த்தி வங்கிச்சங்கங்கள் என்பற்றினுடாக சமுர்த்தி பயனாளிகள் குறைந்த வருமானம் பெறுவோரின் உற்பத்திகளை இடைத்தரகர்களின்றி சந்தைக்கு வழங்குவதன் ஊடாக அதிக நன்மைகளை நுகர்வோருக்கு வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமென சமுர்த்தி அதிகாரசபையின் பணிப்பாளர் ஆர்.பி.பி.திலகசிறி; தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--