2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

அரசாங்கத்தின் நிகழ்சிநிரலுக்கு தேர்தல் திணைக்களம் ஆதரவு : கபே

Super User   / 2011 மார்ச் 05 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசாங்கம் வேண்டுமென்றே சில உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒத்திவைப்பதாகவும்  60 இற்கும் மேற்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்திவைத்து அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு தேர்தல்கள் ஆணையாளர் ஆதரவரிப்பதாகவும் நீதியானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இத்தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்தாத நிலையில் தேர்தல் முறைகேடுகள் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதகாவும் கபே அமைப்பின் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோண் தெரிவித்துள்ளார்.

தேல்தல் தொடர்பான அடிப்படை விதிகளைக்கூட பொலிஸாரும் தேர்தல் திணைக்களமும் முறையாக அமுல்படுத்ப்படவில்லைஎனுவம் தேர்தல் ஆணையாரும் தேர்தல் சட்டங்களை மீறுவதாகவும் கபே பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியதால் அவரக்ள் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் ஆபத்தை எதிர்நேக்குவதாகவும்அவர்கூறியுள்ளார். (லக்னா பரணமான்ன)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--