Super User / 2011 மார்ச் 05 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.செல்வநாயகம்)
இடம்பெயர்ந்தோருக்கான முகாமில் தடுத்துவைக்கப்பட்டு, பின்னர் பூஸா தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ள பார்வையற்ற நபர் ஒருவரை இரு வாரங்களுக்குள் விடுவிப்பதற்கான பொறுப்பை சட்டமா அதிபர் நேற்று வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றில் ஏற்றுக்கொண்டுள்ளார்.
சிறி செல்வன் அன்டன் ஜுட்ஸ் எனும் மேற்படி பார்வையற்ற நபர் தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் சிராணி திலகவர்தன, கே. ஸ்ரீபவன், எஸ்.ஐ.இமாம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அவ்வேளையில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச வழக்குரைஞர் துஷார குமாரகே, சந்தேக நபரை இரு வாரங்களுக்குள் விடுவிப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இவ்வழக்கில் மனு தாரர் சார்பில் சட்டத்தரணிகள் எம்.ஏ. சுமந்திரன், விரான் கொரையா, சரித டி பொன்சேகா ஆகியோர் ஆஜராகினர்.
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026