Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Super User / 2011 மார்ச் 25 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சந்துன் ஏ ஜயசேகர)
மாத்தறையிலிருந்து கொழும்பிற்கு கன்னிப் பயணத்தை ஆரம்பித்த இந்திய ரயில் என்ஜின் ஹிக்கடுவையில் பழுதடைந்தமைக்கு அதன் மின்சுற்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம் என மேற்படி ரயில் என்ஜினை விநியோகித்த ரிட்ஸ் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு 20 ரயில் என்ஜின்களை வாங்குவதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது. எனினும் மேற்படி ரயில் பயணம் தடங்கலுக்குள்ளானதையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்துமாறும் ரயில் என்ஜின்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இடைநிறுத்துமாறும் போக்குவரத்து அமைச்சர் குமார் வேல்கம உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் மின்சுற்றில் ஏற்பட்ட கோளாறே மேற்படி தடங்கலுக்கு காரணம் என்பதை குறித்த இந்திய நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வி.கே.ஜெய்ன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .