2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்து: இளைஞர் பலி

Freelancer   / 2025 ஜூலை 04 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரீ.ஏல்.ஜவ்பர்கான்)

அதிவேகமாக செலுத்திவந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதால் 17 வயது இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக  உயிரிழந்துள்ளார் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதியில் இடம்பெற்றுள்ளது.

மிக அதிக வேகமாக செலுத்தி வந்த மோட்டார்சைக்கிள் பாதையை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியுள்ளது. இதனால் 17 வயதுடைய முஹம்மத் என்ற இளைஞர் பலியாகியுள்ளார். 

படுகாயமடைந்த இவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .