Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Super User / 2011 மார்ச் 29 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, ஜீவனோபாயம், மற்றும் வளங்களின் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான 'பாதை வரைபடம்' ஒன்றை அமுல்படுத்துவதற்கு இரு நாடுகளின் மீனவர்கள் தொடர்பான கூட்டுச்செயற்குழு இணக்கம் கண்டுள்ளது.
புதுடில்லியில் மார்ச் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தில் இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
இப்பேச்சுவார்த்தைகளில் இலங்கைத் தூதுக்குழுவுக்கு வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் உயங்கொடவும் இந்தியத் தூதுக்குழுவுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் ரி.எஸ். திருமூர்த்தியும் தலைமை தாங்கினர்.
இலங்கைத் தூதுக்குழுவின் தலைவர் இன்று செவ்வாய்க்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவையும் சந்தித்து பேசினார்.
இக்கூட்டத்தின் பின்னர் இரு தரப்பினரும் விடுத்த கூட்டறிக்கையொன்றில் இக்கூட்டத்திற்கு வரவேற்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கு முன் 2006 ஆம் ஆணடு இக்கூட்டுச்செயற்குழு கொழும்பில் சந்தித்து பேசியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
03 Jul 2025