Suganthini Ratnam / 2011 மார்ச் 31 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்பரை வீரர்கள் நால்வர் நேற்றுக் காலை முதல் காணாமல் போயுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
'இது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக இந்திய கரையோர காவல் படைக்கு அறிவித்துள்ளோம்' என டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு அவர் கூறினார்.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிய படகொன்றில் மேற்படி கடற்படை வீரர்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நேற்றுக் காலை அவர்கள் திரும்ப வேண்டியிருந்தபோதிலும் அவர்கள் திரும்பி வரவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். (DM)
18 minute ago
21 minute ago
36 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
21 minute ago
36 minute ago
39 minute ago