Editorial / 2026 பெப்ரவரி 12 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் சீனா ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது போல, ரஷ்யாவில் தற்போது வாட்ஸ்அப்-க்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட டெலிகிராம் செயலிக்கும் புடின் அரசு தடை விதித்திருக்கிறது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை குறித்து வாட்ஸ்அப் கவலை தெரிவித்தது. இது 10 கோடிக்கும் அதிகமான யூசர்களை தனிமைப்படுத்தும் என கூறியது. மேலும், மக்களுக்கான பாதுகாப்பைக் குறைக்கும் என்றும் வாட்ஸ்அப் குறிப்பிட்டது.
"ரஷ்ய அரசு, மக்களை அரசுக்குச் சொந்தமான கண்காணிப்பு செயலிக்குத் திசை திருப்பும் முயற்சியாக வாட்ஸ்அப்பைத் தடுக்க முயல்வது, பாதுகாப்பான தகவல்களிலிருந்து மக்களைப் பிரிக்கும் பிற்போக்குச் செயலாகும். யூசர்களை தொடர்ந்து இணைப்பில் வைத்திருக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்" என்று வாட்ஸ்அப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. டெலிகிராம் நிறுவனர் பவெல் துரோவ், ரஷ்யாவின் இம்முயற்சியை கடுமையாக விமர்சித்தார். அவர் இதை சர்வாதிகாரம் என்று சாடினார். தனது தளத்தின் உறுதியான நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார். இச்செயல் ஒரு வலுவான எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. "ரஷ்யா டெலிகிராமை கட்டுப்படுத்துவது, அதன் குடிமக்களைக் கண்காணிப்பு மற்றும் அரசியல் தணிக்கைக்கான அரசு கட்டுப்படுத்தப்பட்ட செயலிக்குத் தள்ளவே. இந்த நகர்வு எங்கள் பாதையை மாற்றாது; எந்த அழுத்தத்திலும் டெலிகிராம் சுதந்திரம், தனியுரிமைக்காகவே நிலைத்து நிற்கும்" என பவெல் துரோவ் அழுத்தமாகக் கூறினார்.
ரஷ்யாவுக்கும், வெளிநாட்டு அப்ளிகேஷன்களுக்கும் இடையில் அடிக்கடி பஞ்சாயத்துகள் எழும். ஆனால், உக்ரைன் போரை தொடர்ந்து இந்த பஞ்சாயத்துகள் அதிகரித்திருக்கின்றன. இப்படி இருக்கையில், தற்போது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராமுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மாற்றாக MAX எனும் அப்ளிகேஷனை அந்நாட்டு அரசு கொண்டு வந்திருக்கிறது. இதில், சாட் வசதி மட்டுமல்லாத அரசு ஆவணங்களை சேமித்து வைக்கும் அம்சமும் இடம் பெற்றிருக்கிறது. ஆனால், இது மக்களை கண்காணிப்பதற்காக கொண்டுவரப்பட்ட செயலி என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர். இருப்பினும் ரஷ்ய அரசு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது
24 minute ago
25 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
25 minute ago
49 minute ago
2 hours ago