Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஏப்ரல் 05 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுமையா றிஸ்வி)
கொழும்பு மாநகர சபையையும் ஏனைய 3 மாநகர சபைகளையும் இணைத்து கொழும்பு பெரு நகர கூட்டுத்தாபனத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
"பொதுமக்களுக்குரிய அதிகாரத்தை அரசாங்கம் கைப்பற்ற நாம் அனுமதிக்கப் போவதில்லை. உள்ளூராட்சி அதிகார சபையொன்றுக்கு பொருத்தமானவர்கள் என கருதப்படுபவரை தெரிவு செய்வதற்கான உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும்" என ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார். மேற்படி திட்டமானது சட்டத்திற்கு முரணானதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பெருநகர கூட்டுத்தாபனத் திட்டத்திற்குள் உள்ளடக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ள பிரதேசங்கள் ஐ.தே.க. ஆதிக்கம் செலுத்திவரும் பிரதேசங்கள் எனவும் இது எதிர்க்கட்சியை. ஒடுக்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் சூழ்ச்சியாகும் எனவும் அவர் கூறினார்.
"வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரங்களை பரவலாக்குவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதேவேளை, தெற்கிலுள்ள மக்களின் உரிமைகளை நிராகரிக்கிறது" எனவும் அத்தநாயக்க கூறியுள்ளார்.
54 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago