Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 08 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை, கீழ்ப்பாக்கம் தொடர்மாடிக் குடியிருப்பொன்றில் நேற்று இடம்பெற்ற தீவிபத்தில் இலங்கையைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கீழ்ப்பாக்கம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது இரு மகள்மாரே உயிரிழந்துள்ளனர். அத்துடன், குறித்த குடும்பத்தின் தலைவரும் அவரது இளைய மகளுமே எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்துச் சம்பவம் ஒரு தற்கொலை முயற்சியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஞானசந்திரன் என்ற மேற்படி குடும்பஸ்தர் அவரது மனைவி ஜெயா மற்றும் மூன்று பெண் பிள்ளைகளுடன் குறித்த தொடர்மாடிக் கட்டிடத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு குறித்த தொடர்மாடிக் கட்டிடத்திலிருந்து புகை வெளிவருவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீயிணைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன் சம்பவத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கீழ்ப்பாக்கம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago