Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூன் 09 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுக்கும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கும் இடையில் இன்று மாலை அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குறித்து அவர்கள் இருவருக்குமிடையில் கலந்துரையாடப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விவாதிப்பதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ், பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய உயர்மட்டக் குழு நாளை கொழும்பு வந்தடையவுள்ளது.
இந்திய உயர்மட்டக் குழுவின் இரண்டு நாள் பயணத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படள்ளது.
இந்நிலையிலேயே இன்று தமிழக முதல்வரை சந்தித்து சிவசங்கர் மேனன் ஆலோசனை நடத்தியுள்ளார் என்று தமிழக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
44 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago
ajan Friday, 10 June 2011 03:04 AM
இன்று காலை கெஹலிய சொல்லி இருந்தார் தமிழக அரசின் செயல்பாடு பற்றி எங்களுக்கு கவலை இல்லை , நாங்க மத்திய அரசுடன் மட்டும் தான் பேசுவோம் என்று. இந்தியா எனும் நாட்டில் தமிழகம் எனும் மாநிலம் முக்கியமான ஓன்று , எல்லா வகையிலும் முக்கியமான ஒரு மாநிலம் .
ஆறுகோடி மக்களின் உணர்வை அவ்வளவு சிக்கிரம் இந்திய மத்திய அரசால் புறகணிக்க முடியாது.
இது கூட தெரியாமல் எங்களுக்கு கவலை இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் அறிவோம் இவர்களின் பின்கதவு ராஜதந்திரம்.
சந்திரபாபு ஊடக சில வேலைகள் நடக்கிறது. ஆனால் அது எந்த அளவு சாத்தியம் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்
Reply : 0 0
xlntgson 0776994341;0716597735 sms only Friday, 10 June 2011 09:12 PM
தமிழ்நாடு மிக முக்கியமான மாநிலம்தான் அதற்காக இந்தியாவின் இறையாண்மையை குறைக்கும் எந்த தீர்மானத்துக்கும் பாராளுமன்ற இரு அவைகள் அமைச்சரவை அங்கீகாரம் இறுதியில் ஜனாதிபதியின் ஒப்புதலும் இன்றியமையாதது.
பாதுகாப்புச் செயலர் மட்டுமல்ல எந்த அதிகாரியும் முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. அவர்களது ஆலோசனைகளை கேட்டுத்தான் ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இல்லை. முதல்வர் கேட்டுக்கொண்டால் அரசு பரிசீலிப்பதாக கூறலாம். ஆலோசகர்கள் அதற்காகவே இருக்கின்றனர்! அரசியல்வாதிகளை குறை கூறலாம். அதிகாரிகளை கூற இயலாது!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago