Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஜூன் 10 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
13.12.2009 ஆம் திகதி சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தியை முற்றாக மறுக்க வேண்டாம் என சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரெட்ரிகா ஜேன்ஸ் அழுதார் என ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் தெரிவித்தார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கில் சாட்சியமளிக்கும்போதே அநுரகுமார திசாநாயக்க எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 11 வருடங்களாக அரசியலில் ஈடுபடும் தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்ததாகவும் பொன்சேகாவின் கட்சி அலுவலகத்தில் தான் ஒரு அலுவலகத்தைக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி வேட்பாளராக பொன்சேகா போட்டியிடுவதற்;கு ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. உட்பட பல அரசியல் கட்சிகள் ஆதரவளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
14.12.2009 ஆம் திகதி தானும் மங்கள சமரவீரவும் சரத் பொன்சேகாவும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது லால் விக்கிரமசிங்கவுடன் வந்த பிரெட்ரிகா ஜேன்ஸ் அழுதார். டிசெம்பர் 13 ஆம் திகதி சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான ஆக்கம் சர்ச்சைக்குரியது எனினும் அதை முற்றாக நிராரிக்க வேண்டாம், ஏனெனில் அது தனது (பிரெட்ரிகா) வாழ்க்கைக்கு ஆபத்தாகிவிடும் என பொன்சேகாவிடம் கூறினார் எனவும் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அநுர குமார திசாநாயக்கவை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் புவனேக அளுவிஹார குறுக்கு விசாரணை செய்தபோது, சரத் பொன் பொன்சேகா அந்த செய்தியை நிராகரித்து தெளிவேற்படுத்த வேண்டும் என தான் ஆலோசனை வழங்கியதாகவும் அதை ஏற்றுக்கொள்ளாத பொன்சேகா, அப்படி செய்தால் இந்த நங்கைக்கு என்ன நடக்கும் என கேட்டதாகவும் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
"ஜனாதிபதித் தேர்தலின் பின் நாட்டில் சர்ச்சையான சூழ்நிலை ஏற்பட்டது எனவும் 2010 பெப்ரவரி மாதம் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டார்கள்" எனவும் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். (TFT)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago
05 Jul 2025