2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பணிப்பெண் மீதான சித்திரவதை குறித்து விசாரணை

Menaka Mookandi   / 2011 ஜூன் 14 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை பணிப்பெண் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை பற்றி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் லெபனான் அதிகாரிகளிடம் கேட்டுள்ளது.

இந்த பணிப்பெண்ணை இவரது முன்னாள் எஜமான் பலவந்தமாக ஆணிகளை விழுங்க வைத்தார் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.

மல்காந்தி என்னும் பெயருடைய இந்தப் பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தனது முன்னைய எஜமான் தன்னை கட்டாயப்படுத்தி ஆணிகளை விழுங்கச் செய்ததாக தனது புதிய எஜமானிடம் கூறினார் என  மேற்படி பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

லெபனானிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் இந்தப் பணிப்பெண்ணின் நலனைக் கவனிப்பர் என்றும், இவர் புதிய எஜமானின் கீழ் தொடர்ந்து வேலை செய்ய விரும்புகின்றார் எனவும் அவர் கூறினார்.

இந்தப் பணிப்பெண்ணின் வயிற்றிலிருந்த ஆணிகள் வைத்தியர்களால் அகற்றப்பட்டு விட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X