Suganthini Ratnam / 2011 ஜூன் 16 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இலகுவான உள்ளூர், வெளியூர் போக்குவரத்து சுற்றுலாத்துறை சேவைகளை யாழ்ப்பாண மக்களுக்கு வழங்கும் வகையில் நேற்று புதன்கிழமை நேஷன் பொப்பியூலர் ரவல்ஸ் மற்றும் சுற்றுலாத்துறை முகவர் நிலையத்தின்(Nation Popular Travels and Tours) கிளை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதிக்குழுக்களின் தலைவருமான மு.சந்திரகுமார் இதனை திறந்து வைத்து உரையாற்றுகையில்,
யுத்தத்தின் பின்னர் வடக்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் ஒரு நிகழ்வாகவே இது அமைகிறது. யாழ்ப்பாண மக்கள் முன்னர் தங்களது போக்குவரத்தை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். ஆனால் தற்போது அவ்வாறில்லை. எமது மக்களின் போக்குவரத்து நடைமுறைகளை இலகுபடுத்துவதற்காக இந்த நிறுவனம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவையும் எமது மக்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகும். இதன் மூலம் பயணியொருவர் ஆறாயிரம் ரூபாய் செலுத்தி பயணத்தை மேற்கொள்ளமுடியுமென்பதுடன், இருநூறு கிலோகிராம் பொருட்களையும் கொண்டு செல்லமுடியும்.
பலாலி விமான நிலையமும் புனரமைக்கப்பட்டு அதன் சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் எமது பிரதேசத்தின் போக்குவரத்துக்கள் இலவாக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய துனைத்தூதரகத்தின் தூதுவர் வி.மகாலிங்கம், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகளான சுப்பிரமணியம் திருநாவுக்கரசு, இந்தியன் வங்கியின் யாழ். கிளை முகாமையாளர் சிறிதர், முகவர் நிலையத்தின் பணிப்பாளர் நகுலன், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
.jpg)
39 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago
1 hours ago