Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Super User / 2011 ஜூன் 16 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
இலங்கையின் 33 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்நியமனம் அமுலுக்கு வரவுள்ளது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தையடுத்து பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய அப்பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை வழங்கியதைடுத்து பதில் பொலிஸ்மா அதிபராக என்.கே. இளங்ககோன் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1970களின் பிற்பகுதியில் பொலிஸ் திணைக்களத்தில் இணைந்த என்.கே. இளங்ககோன் 1982 ஆம் ஆண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகர் பரீட்சையில் சித்தியடைந்தார். விசேட அதிரடிப்படையில் சேவையாற்றிய அவர் அநுராதபுரத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகவும் கடமையாற்றியுள்ளார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட பல பதவிகளை வகித்த அவர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago