2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

'உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடுவதில் தாமதம் ஏற்படாது'

Super User   / 2011 ஜூன் 17 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பல்கலைக்கழக ஆசிரியர்கள் இவ்வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்துவதிலிருந்து வாபஸ் பெற்றாலும் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட மாட்டாது என கல்வி அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை உறுதியளித்துள்ளது.

பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மேற்பார்வைப் பணியிலேயே ஈடுபடுவதாகவும் இதனால் அவர்கள் வாபஸ் பெறுவது விடைத்தாள்கள் திருத்தும் நடவடிக்கை தடங்கலுக்குள்ளாக மாட்டாது எனவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

"க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளைத் திருத்தும் பணிக்காக ஏற்கெனவே 30,000 பேரை நாம் தெரிவு செய்துள்ளோம். எனவே விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது" என அவர் கூறினார்.

இவ்வருட உயர்தரப்பரீட்சை ஆகஸ்ட் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. சுமார் 272,000 மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

(லக்னா பரணமான்ன)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X