2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

தேர்தல் ஆணையக குழு வடக்கு விஜயம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 21 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நபீலா ஹுசைன்)

ஜூலை 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளுடன் பேசுவதற்காக மூன்று அங்கத்தவர் குழுவொன்று முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு செல்லவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று கூறினார்.

முல்லைத்தீவில் முதல் தடவையாக தேர்தல் அலுவலகம் ஒன்றை திறக்கவுள்ளதாகவும்  புதுக்குடியிருப்பில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் வேலை முடியாதபடியால் அங்கு தேர்தலை ஒத்திப்போடுவதுபற்றி ஆராய்ந்து வருவதாகவும் தேர்தல் ஆணையாளர் கூறினார்.

வடக்கிற்கு செல்லவுள்ள குழுவில் பிரதி தேர்தல் ஆணையாளரும் ஓய்வுபெற்ற தேர்தல் அதிகாரிகள் இருவரும் அங்கத்தவர்களாக உள்ளனர். கட்சிகளின் பிரதிநிதிகளும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் கட்சியொன்றுக்கு ஒரு சிரேஷ்ட அங்கத்தவர் என்ற வகையில் ஒருவரும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் குழுவினர் நடத்தும் கூட்டத்தில் கலந்துகொள்வர் என்று அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .