2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

இலங்கை தொடர்பான விவாதத்தை மலேஷிய நாடாளுமன்றம் நிராகரிப்பு

Super User   / 2011 ஜூன் 22 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக மலேஷிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணையொன்றை மலேஷிய நாடாளுமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

"அது மற்றொரு நாட்டின் உள் விவகாரம்" என்ற அடிப்படையில் இப்பிரேரணை நிராகரிக்கப்பட்டது.

டி.ஏ.பி.-  கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் கருத்துத் தெரிவிக்கையல் இந்த நாடாளுமன்றம் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு எதிராக தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளது என சுட்டிக்காட்டினார்.

பி.கே.ஆர்.  கட்சியைச் சேர்ந்த ஜொஹரி அப்துல் கூறுகையில், இந்நாடாளுமன்றம் பலஸ்தீன மற்றும் பர்மாவின் ரோஹிங்கயாஸ் விவகாரங்கள் பற்றி விவாதித்துள்ளது.

இலங்கை மாத்திரம் மிக விசேடமாவது ஏன்? என செய்தியாளர்களிடம் பேசுகையில் குலசேகரன் கேள்வி எழுப்பினார்.

இவ்விவாதத்துக்கான பிரேரணையை ஜொஹரி அப்துல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 300,000 பேர் இடம்பெயர்ந்து முகாம்களில் இருப்பதாகவும் அவர்களில் ஆயிரக்கணக்கானோர் முஸ்லிம்கள் எனவும் பி.அமீன் தெரிவித்துள்ளார்.

'80,000 பெண்கள் விதவைகளாகியுள்ளனர். சரணடைந்த 5000 தமிழ் போராளிகள் எங்கேயென்று தெரியவில்லை. பல பெண்களும் சிறார்களும் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர்' எனவும் அவர் கூறியுள்ளார்.


 


  Comments - 0

 • xlntgson 0776994341;0716597735 sms only Friday, 24 June 2011 09:33 PM

  அப்படி என்றால் பிரிட்டனும் இந்தியாவில் தமிழ்நாடும் முந்திரிக்கொட்டைகளோ?

  Reply : 0       0

  aju Wednesday, 22 June 2011 07:48 PM

  முயற்சிக்கு நன்றி

  Reply : 0       0

  Mohd Wednesday, 22 June 2011 11:08 PM

  Well done Malayasia , This criminal done by only LTTE .

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .