Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூன் 23 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைப் பற்றிய முக்கிய தகவல்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவு வழங்க மறுப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்ததை பொலிஸார் மறுத்துள்ளனர்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் வவுனியா நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விபரங்களை அவர்களின் பெற்றோர்களுக்கு வழங்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மறுப்பதாக த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக பொலிஸ் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி கூறுகையில், பொலிஸாராலும் குற்றப்புலனாய்வுப் பிரிவினராலும், இராணுவத்தினராலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய விபரங்களைக் கேட்டு வருவதாகவும் ஆனால் இவர்களைப் பற்றிய தகவல்களை வழங்க தமக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறினார்.
பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அல்லது விடுதலை செய்யப்பட்டவர்களை பற்றிய விபரங்களை மாத்திரமே குடும்பத்தினருக்கு அல்லது உறவினர்களுக்கு வழங்க முடியும் என அவர்கூறினார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களால் தமது உறவினர்களுக்கு வழங்க அனுமதிக்கப்பட்ட தகவல்களை மாத்திரம உறவினர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.
பூஸா, வவுனியா, கொழும்பு, ஆகிய இடங்களில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அலுவலகங்களில் அமைந்துள்ள தகவல்கள் நிலையங்களில், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்கள், இடம் போன்ற தகவல்களை வெளியிட்டுள்ளன எனவும் அவர் கூறினார்
19 minute ago
22 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago
40 minute ago