2025 ஜூலை 19, சனிக்கிழமை

பஹ்ரெய்னில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் தூதரகத்துடன் தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை

Super User   / 2011 ஜூன் 25 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பஹ்ரெய்னில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் அங்குள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்புகொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

பஹ்ரெய்னில் சுமார் 200 இலங்கையர்கள் சட்டவிரோதமாக தொழில்புரிவதாக அல்லது தங்கியிருப்பதாக இலங்கையின் கௌரவ தூதுவர் பி.பீ. ஹிகொட தெரிவித்துள்ளார்.

அவர்கள் முன்வந்து தம்மை வெளிப்படுத்தினால் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் நாட்டைவிட்டு வெளியே உதவவும் முடியும் என அவர் கூறியுள்ளார்.

இலங்கையர்களுக்கு உதவிகள், ஆலோசனைகள் வழங்கும் நடமாடும் சேவையொன்றின் வைபவம் நேற்று மனாமா நகரிலுள்ள ஸ்ரீலங்கன் கிளப் ஹவுஸில் நடைபெற்றது. இந்நிலையிலேயே பி.பீ. ஹிகொட மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டுக் கோரிக்கை, தொழிலாளர் பிரச்சினை முதலானவற்றை இலங்கையின் கௌரவ தூதுவர் பி.பீ.ஹிகொட, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி  அமைச்சரின் குவைத் கௌன்ஸுலர் கல்யாணி ஹேரத் மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் அங்குள்ள இலங்கையர்கள் முன்வைத்தனர்.

தொழில்புரிந்த இடங்களிலிருந்து தப்பிச்சென்ற 15 ஊழியர்கள் குறித்த தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஹிகொட கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X