2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களை வாகனத்திலிருந்து வெளியேற்றிய எம்.பி.

Super User   / 2011 ஜூலை 15 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காலி மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தனது வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது தனது பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களான பொலிஸார் இருவரை இடையில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.

உத்தியோகபூர்வ விடயமொன்று தொடர்பாக, தென் பிராந்திய  பிரதி பொலிஸ் மா அதிபரை தொடர்புகொள்வதற்கு மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அனுமதிக்காததால்  அவர்களை பொத்தல சந்தியில் இறக்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிடம் கேட்டபோது, அப்பொலிஸார் முறையற்றவிதமாக நடந்துகொண்டதால்  வாகனத்திலிருந்து இறங்குமாறு தான் கூறியதாக பதிலளித்தார். (டி.ஜி. சுகதபால)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--