Super User / 2011 ஜூலை 17 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் இளம் திரைப்பட இயக்குநரான சுஜீவ புஷ்பகுமார, சென் பீற்றர்ஸ்பர்க் சர்வதேச திரைப்பட விழாவில் புதிய பிராந்திய பிரிவில் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றுள்ளார்.
இவ்விழா ஜூலை 10 முதல் 15 ஆம் திகதிவரை ரஷ்யாவின் சென் பீற்றர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது.
சுஜீவ புஷ்பகுமார தனது முதலாவது திரைப்படமான இகிலென மாலுவோ (பறக்கும் மீன்கள்) எனும் திரைப்படத்திற்காக இவ்விருதை வென்றார். யுத்தத்திற்கு மத்தியில் கிழக்கு மாகாணத்திலுள்ள கிராமமொன்றில் நடக்கும் 3 கதைகளைக் கொண்ட திரைப்படம் இது. சீனா, ஈரான், ரஷ்யா, அமெரிக்கா, போலந்து, ஸ்பெய்ன், டென்மார்க் ஆகிய நாடுகளின் 10 திரைப்படங்களுடன் போட்டியிட்டு இவ்விருதை சுஜீவ வென்றுள்ளார்.
இதேவேளை, புதிய பிராந்தியங்களுக்கான சிறந்த படமாக சீன இயக்குநர் மியோயான் ஸாங் இயக்கிய 'பிளெக் பிளட்' எனும் திரைப்படம் தெரிவுசெய்யப்பட்டது.
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago