2025 ஜூலை 09, புதன்கிழமை

சாட்சியங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் நல்லிணக்க ஆணைக்குழு

Super User   / 2011 ஜூலை 17 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் சேகரிக்கப்பட்ட சாட்சியங்களை மீண்டும் உறுதிப்படுத்துவதாக ஆணைக்குழுவின் ஊடக பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரசிங்க தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

பொதுமக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை அடிப்படையாக கொண்டு இறுதி அறிக்;கை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆணைக்குழுவிற்கு சாட்சியங்களில் தெளிவின்மை காணப்பட்டால் குறித்த சாட்சியத்தை சமர்ப்பித்தவரை தொடர்புகொண்டு உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த உறுதிப்படுத்தல் நடவடிக்கை தொலைபேசி, மின்னஞ்சல், பதிவு தபால் மற்றும் தொலைநகல் ஊடாக மேற்கொள்ளப்படுவதாக லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக உறுதிப்படுத்த வேண்டின் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயலகத்திற்கு அழைத்து தகவல் பெறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இறுதி அறிக்கையை எழுதுவதற்காக மக்களால் வழங்கப்பட்ட சாட்சியங்கள் தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளவதாகவும் அவர் தெரிவித்தார்.

காணி பிரச்சினை என்றால் காணி ஆணைக்குழுவுடனும் மீள்குடியேற்றம் தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சுடனும் மாவட்டங்களுக்கு உட்பட விடயங்கள் தொடர்பில் குறித்த மாவட்ட செயலகங்களுடன் தொடர்புகொண்டு விசாரணைகளை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்படுவதுடன் குறித்த சாட்சியங்கள் தொடர்பில் இன்னும் பல மேலதிக  தகவல்களை பெற முடிவதாகவும் நல்லிணக்க ஆணைக்குழு இறுதி அறிக்கையை எழுதுவதற்காக சாட்சியங்களை ஆய்வு செய்வதாக குறிப்பிட்ட அவர், நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்றார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரி;கா குமாரதுங்க, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரின் சாட்சியங்களை நல்லிணக்க ஆணைக்குழு வரவேற்கின்றது. எனினும் அவர்கள் இதுவரை சாட்சியமளிக்க முன்வரவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் சாட்சியமளிக்க முன் வருவார்களேயானால், சந்தர்ப்பம் வழங்கப்படும் என லக்ஷ்மன் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • aj Sunday, 17 July 2011 11:18 PM

    யாருமே கேட்க மாட்டிகிறாங்க. யார் சரி இவங்க சொல்லுறதையும் கேளுங்கப்பா.

    Reply : 0       0

    Kannu Sunday, 17 July 2011 11:41 PM

    ஹீஈ.... :-)

    Reply : 0       0

    Kovi Monday, 18 July 2011 03:43 PM

    இன்னுமாடா நம்மள இந்த சமூகம் நம்பிக்கிட்டு இருக்கு...? :-p

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .