2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'பணிப்பெண் ரிஸானாவுக்கு குழந்தையின் பெற்றோர் மன்னிப்பு வழங்கவில்லை'

Super User   / 2011 ஜூலை 18 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

இலங்கையில் கூறுவதை போன்று குறித்த குழந்தையின் பெற்றோர் இதுவரை மன்னிப்பு வழங்கவில்லை. மன்னிப்பு வழங்குவது என்றால் இருவரும் இணைந்தே மன்னிப்பு வழங்குவார்கள். சவூதி அரேபியாவில் ஒரு போதும் பெற்றோரில் ஒருவர் மன்னிப்பு வழங்குவதில்லை என டாக்டர் கிபாயா ஸ்திகார் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

பணிப்பெண் ரிஸானா நபீகிற்கான மரண தண்டனையை கடந்த வருடம் மேன் முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்திய விடயம் இதுவரை ரிஸானாவுக்கு தெரியாது என அவர் குறிப்பிட்டார்.  

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலுள்ள இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக் மூதூரில்; இருப்பதை விடவும் நல்ல முறையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கண்டியை பிறப்பிடமாக கொண்ட டாக்டர் கிபாயா ஸ்திகார், சவூதி அரேபியாவிலுள்ள வைத்தியசாலையொன்றில் பற்சிகிச்சை வைத்திய நிபுணராக கடந்த 10 வருடங்களாக கடமையாற்றி வருகின்றார். இவர் மாத்திரமே சிறையிலுள்ள பணிப்பெண் ரிஸானா நபீகை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டவராவார்.

"சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலிருந்து 400 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள தவாத்மீ எனும் சிறைச்சாலையிலேயே ரிஸானா உள்ளார். நான் ஒவ்வொரு மாதமும் அவரை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறுவேன். இதன்போது மூதூரிலுள்ள பெற்றோருடன் ரிஸானா தொலைபேசியில் உரையாடுவார்" என அவர் குறிப்பிட்டார்.

அவரை பார்வையிடும் போது எனக்கு சிறைச்சாலை அதிகாரிகளினால் எந்த தடையும் இல்லை. அத்துடன் சிறைச்சாலை அதிகாரிகள் ரிஸானாவிற்கு பல சலுகைகளை வழங்குகின்றனர் என டாக்டர் கிபாயா தெரிவித்தார்.

குறித்த குழந்தையின் பெற்றோரால் மன்னிப்பு வழங்கினால் மாத்திரமே ரிஸானாவை விடுதலை செய்யமுடியும். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கு தேவையான பல கட்டங்களை இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தாண்டியுள்ளது  என டாக்டர் கிபாயா கூறினார்.

எனினும், ரிஸானாவின் விடுதலைக்காக இலங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தி எதனையும் சாதிக்க முடியாது. ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதன் மூலம் சவூதி அரேபியாவின் கோபத்திற்கே ஆளாக நேரிடும். இதனால் ரிஸானா நபீகிற்கான மரண தண்டனை துரிதப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

"இது தனிப்பட்ட நபரின் பிரச்சினை என்பதால் மன்னிப்பின் மூலமே ரிஸானாவை விடுதலை செய்ய முடியும். சவூதி அரேபிய அரசாங்கத்தினாலே அல்லது மன்னனினாலே எதுவும் செய்ய முடியாது. எனவே இதனை மிக நுணுக்கமாகவே கையாள வேண்டும்" என டாக்டர் கிபாயா மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO Tuesday, 19 July 2011 02:08 AM

    ரிசானா பற்றிய ஒன்றுக்கொன்று முரணான பல செய்திகள் வெளிவந்து பொதுமக்களும் செய்திகளை நம்பி பல அபிப்பிராயங்களுடன் என்ன நடக்கப்போகிறதோ என்ற காத்திருக்கும் இச்சந்தர்பத்தில் டாக்டர் கிபாயா ச்திகாரின் அறிக்கை நம்பகமான தகவலாக தெரிகிறது . எது எப்படி இருந்தாலும் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படிதான் நடக்கும். து ஆ விதியை மாற்றக்கூடியது .எனவே ஆர்ப்பாட்டம் அது இது ஷோ காட்டாமல் நாம் செய்யக்கூடியது ரிசானாவின் விடுதலைக்காக ஐவேளை தொழுகை மூலம் பிரார்த்திப்போம்.

    Reply : 0       0

    akkarai Tuesday, 19 July 2011 03:05 AM

    எல்லா விடயங்களையும் குறுகிய மனப்பான்மையுடன் அரசியலாக்கிக் கொள்ளும் எமது சமூகத்தினர் சிந்திக்க....

    Reply : 0       0

    Dr. Rumi Tuesday, 19 July 2011 03:09 PM

    this is an exemplary exposure of the real status of the innocent girl. As Muslims we should make duwa and the actions to prevent the capital punishment. As the dotor correctly stated we should not agitate against the Saudi Government by lifting false and shouting after Jumma prayers. We are infected to the shouting and poster pasting community, a habit probably injected by other cultures. We shouted supporting ghaddafi without analyzing the situation there.

    Reply : 0       0

    asker Tuesday, 19 July 2011 04:30 PM

    இந்த செய்தியை முஜபுர் ரஹ்மான் பார்தால் சரி.

    Reply : 0       0

    vaasahan Tuesday, 19 July 2011 05:58 PM

    இது உண்மையானதாக இருப்பதினால் இதனை ஜீரணித்துக்கொண்டு மேற்கொண்டு ஆக வேண்டியவற்றை நிதானமாக மேற்கொள்வது அவசியம். அரசியல் பலம் ஹராம் அல்ல. ஆனால், நம்முடைய அரசியல்வாதிகள் பலருக்கு எதில் அரசியல் ஆதாயம் பற்றிய சிந்தனை அறவே கூடாது என்ற பக்குவம் இருக்கும் என்று நாம் எதிர்பார்ப்பதுதான் நமது பக்குவமின்மை.

    Reply : 0       0

    abulbasith Tuesday, 19 July 2011 08:44 PM

    டாக்டா் உன்மையான நிலவரத்தை அறியத்தந்தார். அரசியல்வாதிகள் எதையும் புரியாமல் கூச்சல் போட்டுக்கொண்டே இருப்பார்கள். இதற்காக அவர்களின் தரகர்கள் படும்பாடு ஐயோ பாவம். இதுதான் அரசியல். சின்னஞ்சிறிசு ரிஸானா நபீக்கிற்கு இறைவனிடம் மனமுவந்து பிரார்த்திப்போமாக ஆமீன்.

    Reply : 0       0

    xlntgson Tuesday, 19 July 2011 09:06 PM

    ஆர்ப்பாட்டங்கள் தேவை இல்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றேன்; இதனால் தான் தண்டனையை நிறைவேற்றி விட்டு அறிவிப்பதை சவுதியில் வழமையாகக் கொண்டிருந்தனர்;
    இனியும் அவ்வாறு செய்ய தூண்டுவது தான் பலனாக பெறப்பெறும் இறுதியில் இந்த கோஷங்கள் கூட்டங்கள் அரசியல் மையப் படுத்துதல் எல்லாம்.
    அல்லாஹ்வின் கோபப் பார்வை பெரியது, அரசரின் கோபப் பார்வையை விட!
    துஆ செய்ய வேண்டியது தான்;
    ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவன் கையில்!

    Reply : 0       0

    Hamza Wednesday, 20 July 2011 07:32 PM

    காலமே பதில் சொல்லும்.. குற்றவாளி யார்? சுத்தவாளி யார்? என்பது இறைவனே அறிவான்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .