Super User / 2011 செப்டெம்பர் 12 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
பஸ்ஸில் பயணம் செய்த ஜப்பானிய பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட நபர் ஒருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன, 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 8 மாதகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்நபருக்கு 1500 ரூபா அபராதமும் விதித்த நீதிபதி, இந்நபரின் கைவிரல் ரேகையை பதிவுசெய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
கொழும்பு 2, யூனியன் பிளேஸ் பகுதியில் பஸ்ஸில் பயணம் செய்தபோது இந்நபர் தன்னை பாலியல் தொந்தரவுக்குட்படுத்தியதாக மேற்படி ஜப்பானிய பெண் புகார் செய்திருந்தார்.
குருநாகல் நாரம்மலயைச் சேர்ந்த அப்துல் அமானுல்லா எனும் இந்நபர் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொள்வதாக அவரின் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்ததுடன் அவருக்கு குறைந்த தண்டனை விதிக்குமாறும் கோரினார்.
தனது கட்சிக்காரர் திருமணமாகியவர் எனவும் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் அச்சட்டத்தரணி கூறினார்.
பஸ்ஸில் தனக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்த அந்நபர் தன்னை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாகவும் தகாதமுறையில் தொட்டதாகவும் மேற்படி ஜப்பானிய பெண் முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார். தான் குறுகிய கால விடுமுறையில் இலங்கைக்கு வந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
விசாரணைகளின்போது குற்றஞ்சுமத்தப்பட்ட நபர், மதுபோதையில் இக்குற்றங்களை மேற்கொண்டிருப்பது தெரியவந்தது.
23 Oct 2025
23 Oct 2025
easternguy Tuesday, 13 September 2011 03:49 PM
வெட்கம் ....வெட்கம்.........பொது இடத்தில் வைத்து சவுக்கால் அடிக்கணும்........
Reply : 0 0
xlntgson Tuesday, 13 September 2011 09:05 PM
ஒத்திவைக்கப் பட்ட சிறை என்றால் எச்சரிக்கை. இனி ஒருபோதும் போதையில் சேட்டை விடமாட்டான்!
Reply : 0 0
IBNU ABOO Wednesday, 14 September 2011 04:18 AM
ஜப்பானில் ரயில் ,பஸ் பிரயாணம் இந்த கோடையில் ரொம்பவும் ஜோர்தான் . இளமங்கையர் ஆள் பாதி அரைகுறை ஆடைபாதி யுடன் எவரைப்பற்றியும் கவலை இல்லாமல் பிரயாணம் செய்வார்கள். நமக்குதான் ரொம்பவும் புலனடக்கம் தேவை. ஆனால் ஜப்பானிய ஆண்களுக்கு இதில் எந்த அக்கறையும் கிடையாது. பெண்களை உற்றுப்பார்ப்பதை அநாகரிகமாகவும் , கேவலமாகவும் கருதுவார்கள். பெண்களுக்கு மரியாதையும், உரிமையும் ஜப்பானில் மிகுதி. அமானுல்லா போன்றவர்கள் இங்கிருந்தால் ஜெயிலில் தான் காலம் களிப்பார்கள். அல்லது ஜப்பானியப் பெண்களின் கராட்டிக்கு வைத்திய சாலையில்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025