2021 மே 08, சனிக்கிழமை

வதந்திகளை பரப்புவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்: ஜயலத் ஜயவர்தன

Super User   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா)

வதந்திகளை பரப்புவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் வாதங்களை முறியடிப்பதற்கு ஜயலத் ஜயவர்தன ஜெனீவா சென்றுள்ளதாக நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடுமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறியமைக்கு பதிலடியாகவே ஜயலத் ஜயவர்தன இவ்வாறு கூறியுள்ளார்.

'இத்தகைய நடவடிக்கைகள் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கையை நகைப்புக்கிடமாக்கிவிடும். குறைந்தபட்சம் நான் நாட்டிலா அல்லது வெளிநாட்டிலா இருக்கிறேன் என்பதையாவது என்னிடம் கேட்டறிந்திருக்கலாம்' என அவர் கூறினார்.

தற்போது ஐ.நாவில் இடம்பெறும் விடயங்கள் குறித்து ஜயலத் ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், ஐ.நா. கூட்டத்தில்  அரசாங்கம் உண்மையான, நியாயமான பதில்களை அளிக்க வேண்டும். அத்துடன் மனித உரிமை மற்றும் போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதில் அரசாங்கம் உண்யைமாக செயற்பட வேண்டும்.
சர்வதேச சமூகத்தை அமைப்படுத்துதில் அரசாங்கம் நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' எனக் கூறினார்.
 


  Comments - 0

 • IFHAM Thursday, 15 September 2011 01:39 AM

  அரசியல்தானே, இண்டைக்கு எதிரி நாளைக்கு கூட்டாளி.

  Reply : 0       0

  Manithan Thursday, 15 September 2011 03:47 AM

  அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X