2021 மே 15, சனிக்கிழமை

ஹெய்டிக்கு செல்கிறார் இராணுவத் தளபதி

Super User   / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய விரைவில் ஹெய்டிக்கு விஜயம் செய்து, அங்கு ஐ.நா. சமாதானப் படையினரின் செயற்பாடுகளை பார்வையிடவுள்ளார்.

இதேவேளை, ஹெய்டிக்கு செல்லும் வழியில், ஐ.நா. வின் இராணுவ ஆலோசகரும் சமாதானப் படை நடவடிக்கைகள் திணைக்களத்திற்கான ஐ.நா. உதவிச் செயலாளருமான லெப். ஜெனரல் பாபாகார் கயேவையும் இலங்கை இராணுவத் தளபதி சந்தித்து கலந்துரையாடினார்.

நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. சமாதானப்படை திணைக்களத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .