2021 மே 08, சனிக்கிழமை

ஜே.வி.பி.க்குள் குழப்பம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மக்கள் விடுதலை முன்னணியின் களுத்துறை, கொழும்பு, கம்பஹா மாவட்ட அமைப்பாளர்கள், சோமவன்ச அமரசிங்க அணிக்கு எதிராகச் செயற்பட்டு வரும் பிரேம்குமார் குணரத்தினவுடன் இணைந்துகொண்டமையால் கட்சியினுள் பெரும் நெருக்கடி தோன்றியுள்ளது.

பிரேம்குமார் குணரத்தினம், 14 மாவட்டங்களில் கட்சி உறுப்பினர்களையும் தன்னுடன் இணைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இவர் தேசிய பிக்கு முன்னிணி உட்பட ஜே.வி.பி.யுடன் இணைந்த பல அமைப்புக்களையும் கலைத்துள்ளார் எனக் குறிப்பிடப்படுகிறது.  

1985 – 1987ஆம் காலப்பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெற்ற வேளையில் கொல்லப்பட்ட ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினரான ரஞ்சித்தின் சகோதரரான குணரத்தின, அண்மைக் காலம்வரை அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தவராவார்.

இந்நிலையில், இரகசியமாகத் தொழிற்பட்டு ஆயுதப் போராட்டத்தை தொடங்கும் திட்டத்தை குணரத்தினம் கொண்டுள்ளதாக கட்சியின் உயர்பீட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோமவன்ச அணியினர் தமது பக்க நியாயத்தை விளக்க ஊடகவியலாளருடன் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்யவுள்ளனர். ஜே.வி.பி.யானது தமிழர் அபிலாஷைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் குணரத்தினம் உள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலைமையானது சோமவன்ச கட்சிக்குள் இனச்சாயம் பூசப்படுவதாகவும் இதனை கட்சியினர் விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த சில நாட்களாக மேல்மாகாணத்தில் ஜே.வி.பி அலுவலகங்கள் பூட்டிக்கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X