2021 மே 06, வியாழக்கிழமை

மன்மோகன் சிங்கின் ஐ.நா.உரையில் பொருளாதாரம், பயங்கரவாத விவகாரங்களுக்கு முதலிடம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

66 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்குபற்றச் செல்லும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங், தனது நிகழ்ச்சி நிரலில் உலக பொருளாதாரம், பயங்கரவாதம், மேற்காசிய, வட ஆபிரிக்க பிரச்சினைகள் முக்கிய இடத்தை வகிக்கும் என கூறியுள்ளார்.

புதன்கிழமை நியூயோர்க் பயணத்தை தொடங்குவதற்குமுன் விடுத்த அறிக்கையில் ஈரான், தென் சூடான், இலங்கை, யப்பான், நேபாளம் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த தான் உத்தேசித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

'சர்வதேச சமாதானம், பாதுகாப்பு, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் நலன் என்பவற்றை முன்னெடுக்கும் எமது முயற்சிகள் பொதுச்சபையின் செயற்பாடுகளுக்கு வளம் சேர்த்துள்ளன' என அவர் கூறினார்.(IANS)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .